சென்னை தனியார் உணவகத்தில் ராகுல் - விஜய்!
சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் முதல்வர் விஜய்யும் உணவருந்தினர்....
சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் முதல்வர் விஜய்யும் உணவருந்தினர்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெறும் 'மாணவர்கள் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.
தில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் வரவேற்றனர்.
Advertisement
Advertisement
அங்கிருந்து ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றார். அங்கு இருவரும் கூட்டணி குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
பின்னர் நீலாங்கரை இல்லத்தில் இருந்து ராகுல், விஜய் இருவரும் ஒரே காரில் பயணித்து சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று உணவருந்தினர்.
அங்கிருந்து ராகுல் காந்தி சென்னை தனியார் சொகுசு விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்து பின்னர் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சென்னையில் முதல்வர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, தில்லியில் ராகுல் காந்தி வீட்டுக்கு முதல்வா் விஜய் சென்ற நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
CM vijay and Rahul gandhi in chennai hotel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.