சென்னையில் போராடிய மருத்துவப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது!
சென்னையில் போராடிய மருத்துவப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது பற்றி...
சென்னையில் பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக இன்று கைது செய்யதுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.
ஆனால், அவர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பிற மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட நிர்வாகிகளை ஆங்காங்கே வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து இன்று காலை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, காவல்துறை அனுமதி அளிக்காததை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களை காவல்துறையின் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.
Medical workers protesting in Chennai arrested and forcibly hauled away!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.