FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பறக்கும் ரயில் நிலையத்தில் தவறி விழுந்து பெண் பலி! கவனிக்கப்படாமல் இருந்த சடலம்

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் தவறி விழுந்து பெண் பலியானது பற்றி...

14 அக்டோபர் 2026, 12:21 pm IST
பறக்கும் ரயில் நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

பறக்கும் ரயில் நிலையங்களில், நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள உள்கட்டமைப்பு பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் வகையில் ஒரு உயிர் பலி சம்பவம் நடந்துள்ளது.

அக்டோபர் 8-ஆம் தேதி முதல் 55 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சிதைந்த நிலையிலான உடல், மயிலாப்பூர் ரயில் நிலையத்தின் தரைத்தளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

கழிவறைக்குச் செல்லும்போது, ​​நிலையத்தின் கட்டமைப்பில் இருந்த இடைவெளி வழியாக அவர் தற்செயலாக இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

உயிரிழந்தவர் பள்ளிக்கரணை, பாலாஜி நகரைச் சேர்ந்த வி. விஜயா என அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசு ரயில்வே காவல்துறை தெரிவிக்கும் தகவலில், திங்கள்கிழமை காலை சுமார் 11 மணியளவில், ரயில் நிலையத்தின் தரைத்தளத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியது. ரயில் நிலைய மேலாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அங்கு சோதனை செய்த போது பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

அதே வேளையில், ரயில் நிலையத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கழிவறைக்குச் சென்ற தனது தாயார் திரும்பி வரவில்லை என்று கூறி, விஜயாவின் மகள் அக்டோபர் 8-ஆம் தேதியன்று மயிலாப்பூர் காவல்துறையிடம் குறித்த புகாரை அளித்திருந்தார்.

ரயில்வே காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், விஜயா கழிவறைக்குச் செல்லும் வழியில் ரயில் நிலையத்தின் மேம்பாலப் பகுதியிலிருந்து தரைத்தளத்தில் தவறி விழுந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. அவரது உடல் அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு ரயில் நிலையத்தில் இருந்து பெண் காணாமல்போனார் என்று மகள் புகார் அளித்திருந்ததும், உடனடியாக ரயில் நிலையத்தில் தேடுதல் பணி நடந்திருந்தால்கூட அவரைக் காப்பாற்றியிருக்கலாமோ என அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அவர் இறந்து நான்கு நாள்களாக சடலம் கவனிக்கப்படாமல் இருந்த அதே ரயில் நிலையத்தில், அவர் காணவில்லை என்ற போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே காவல்துறையினர் பதில் சொல்ல வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments