FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.120ஆக உயரும் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை: அதிமுக

விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என அமைச்சர் பொய் கூறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றஞ்சாட்டிப் பேசியது குறித்து...

16 அக்டோபர் 2026, 9:30 am IST
அரிசி - பிரதிப் படம்
பகிர்:

அரிசியின் விலை உயரும் என உற்பத்தியாளர்கள் வெளிப்படையாகக் கூறும்போதிலும், விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என அமைச்சர் பொய் கூறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியதாவது, "முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கும்பகர்ண உறக்கத்தில் இருந்து வெளியே வர வேண்டும். மாநிலத்தின் நாளைய தேவை என்ன என்பதை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். மின்தேவை என்ன என்பதை அறியாமல், தேவைக்கும் உற்பத்திக்கும் என்ன இடைவெளி இருக்கிறது என்பதை அறியாத காரணத்தால்தான், மின்தேவையையும் நெருக்கடியையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிற வேளையில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு விலைகொடுத்து வாங்குகிற அரசாக தவெக அரசு உள்ளது.

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவது என்பது தமிழ்நாட்டை பின்னோக்கு அழைத்துச் செல்லும். சாமானிய மக்கள், உணவுக்காக பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விலைவாசி ஏறவில்லை, விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது, நியாய விலைக் கடைகளில் அனைத்தும் வழங்குகிறோம் என உணவுத் துறை அமைச்சர் பொய் கூறுகிறார்.

Advertisement

Advertisement

தீபாவளி நேரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 100-லிருந்து ரூ. 120-ஆக உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரிசி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அரிசி உற்பத்தி ஆலை நிர்வாகிகள் வெளிப்படையாகச் சொன்னபிறகும்கூட, விலைவாசி உயரவில்லை, கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.

summary

Rice mills warn that the price of rice will rise to Rs. 120 per kilogram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments