என்எல்சி சுரங்க மண் படிந்து மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெல் வயல்கள்! விவசாயிகள் சாலை மறியல்
என்எல்சி சுரங்க மண் படிந்து 500 ஏக்கர் நெல் வயல்கள், மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சாலை மறியல்...
நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நெய்வேலி என்எல்சி மண் மேட்டில் இருந்து கரைந்து வந்த மட்டு மண் சுமார் 500 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெல் வயலில் படிந்து, மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலியில் இயங்கி வருகிறது. இங்குள்ள பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண் கம்மாபுரம், ஊ.மங்கலம், கொளப்பாக்கம், சு.கீணனூர் பகுதிகளில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் மண் மேடு கரைந்து வந்து விவசாய நிலங்களில் படிந்து சேதத்தை ஏற்படுத்துவது வழக்கம்.
தற்போது, மேற்கண்ட கிராமங்களில் 1000 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, என்எல்சி நிறுவனம் கொட்டி வைத்திருந்த மண் மேடு கரைந்து அங்கிருந்த வாய்க்காலைத் தாண்டி வெளியேறியது. இதன் காரணமாக, மண் மேட்டில் இருந்து கரைந்து வந்த மட்டு மண், நடவு செய்யப்பட்டிருந்த நெல் வயலின் அடியில் படிந்தும், மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.
Advertisement
Advertisement
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்யப்பட்ட நெல் வயலில் மட்டு மண் படிந்து மழை நீர் தேங்கி நிற்பதால் கவலை அடைந்த விவசாயிகள், விருத்தாசலம் - சிதம்பரம் பிரதான சாலையில், சு.கீணனூர் பகுதியில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்மாபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
500 acres of paddy fields submerged in rainwater due to NLC mine mud Farmers road blockade
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.