போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை
வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜெம் வீரமணி மீதான வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் அருணின் தலையீட்டின் காரணமாக, வீரமணி, சாந்தியின் பெயர் புகாரில் குறிப்பிட்டிருந்தும் காவல் துறையினர் சரிவர விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கை மூட 40 கோடி ரூபாய் வரை பணம் கைமாறியுள்ளதால், வழக்கை மூடியது குறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழங்கும்படி, வாராகிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில்,வழக்கு தொடர்பான இரண்டாவது நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும்,வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேபோல், வீரமணியை திமுக பாதுகாத்ததாக முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களைப் பெற அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், அவகாசம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரணையை நவம்பர் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The Special Investigation Team (SIT) informed the Madras High Court that a charge sheet will be filed soon in the first case against Veeramani.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.