FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை அக். 29 வரை ரத்து!

உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி...

உதகை மலை ரயில். - கோப்புப் படம்
பகிர்:

கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக உதகை மலை ரயில் சேவை மேலும் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும் அங்கு கனமழை பெய்ததால் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் சேவை இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை அக். 29 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Heavy rain, landslides: Ooty mountain train service cancelled until Oct 29

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments