ராஜிநாமா செய்த 6 எம்எல்ஏக்களின் ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்
ராஜிநாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்து உத்தரவு...
ராஜிநாமா செய்த ஆறு அதிமுக எம்.எல்.ஏ.-க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக-வின் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து, உடனடியாக தலைமைச் செயலகத்திலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்நிலையில், அந்த 6 பேரிடமும் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
இருப்பினும் மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டதால், ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் அபராதம் விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் காசி ராமலிங்கம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பிரதான மனு மீதான விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தபோது, மனுவை வாபஸ் பெற சம்மதித்ததாகவும், தொழில்நுட்ப காரணமாக தவறு நடந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Rs. 1 lakh fine imposed on 6 MLAs who resigned has been quashed: Madras High Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.