மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!
மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் விஜய், தண்ணீர் திறந்து வைத்தது பற்றி...
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று (செப். 1) தண்ணீர் திறந்துவைத்தார்.
இன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள், கட்சியினர் பலரும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காமாலபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டூருக்கு வேனில் வந்தார் முதல்வர்.
Advertisement
Advertisement
முதல்வர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் வழியில் மேச்சேரி பகுதியிலும் மேட்டூரிலும் திறந்த வேனில் விஜய் சாலை வலம் மேற்கொண்டார்.
மேட்டூர் அணை திறப்பு நிகழ்வுக்கு வந்த முதல்வர் விஜய், காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தார் முதல்வர் விஜய். மதகுகளில் இருந்து வரும் தண்ணீரில் பூக்களைத் தூவி வரவேற்றார்.
இந்த விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
வழக்கமாக காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், காலதாமதமாக 62-வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay opening water from the Mettur Dam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.