கால்நடை காவலன் விருது... கால்நடை பராமரிப்புத் துறைக்கு வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்!
கால்நடை பராமரிப்புத் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து...
சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சர் செ. கமலி, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ. கமலி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
செட்டிநாடு, நடுவூர் மற்றும் சின்னசேலம் ஆகிய அரசுப் பண்ணைகளில் முயல் வளர்ப்புப் பிரிவுகளை நிறுவி புறக்கடை முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ரூ. 0.28 கோடி செலவில் "புறக்கடை முயல் வளர்ப்புத் திட்டம்" செயல்படுத்தப்படும்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.0.70 கோடி செலவில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்படும்.
சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கிடேரி வளர்ப்பு மையம் அமைக்கப்படும்.
தெருவிலுள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்திற்கான டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
துறைசார் பண்ணைகளில் ரூ.1.25 கோடி செலவில் ஊறுகாய்ப்புல் (Silage) உற்பத்தி அலகுகள் நிறுவப்படும்.
கால்நடை மருத்துவ நிலையங்கள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் "கால்நடை காவலன்" விருது அறிமுகப்படுத்தப்படும்.
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Minister Se. Kamali replied to the debate on the demand for grants for the Animal Husbandry Department in the Legislative Assembly and also made new announcements.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.