FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசுப் பேருந்திலிருந்து மாணவிகளை கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற செயல்! - கனிமொழி

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்திலிருந்து மாணவிகளை கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற செயல் என கனிமொழி தெரிவித்துள்ளது குறித்து...

2 செப்டம்பர் 2026, 4:30 pm IST
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி - படம் - எக்ஸ்
பகிர்:

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்திலிருந்து மாணவிகளை கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற கொடூரச் செயல் என திமுக எம்.பி. கனிமொழி புதன்கிழமை (செப். 2) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

Advertisement

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டதும் மனிதநேயம் அற்ற கொடூரச் செயல்.

கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குவதோடு, உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

summary

DMK MP Kanimozhi stated on Wednesday (Sept. 2) that pushing female students off a government bus in Pudukkottai was an inhumane act.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments