அடுத்த பிரதமர் யார்? பேரவைக்கு வெளியே வெடித்த வார்த்தைப் போர்!
அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து பேரவைக்கு எம்எல்ஏக்கள் பேசியது குறித்து..
தமிழகத்திலிருந்துதான் அடுத்தப் பிரதமர் உருவாகப் போகிறார் என தவெக எம்எல்ஏ கனிமொழி கூறியதற்கு, பதிலளித்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பட், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழக சட்டப்பேரவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2029 ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் விஜய்தான். 2025-ல் நான் கணித்ததைப் போல 2026-ல் விஜய் முதலமைச்சரானார். 2026-ல் நான் சொல்கிறேன் 2029 ஆண்டில் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார் என்றார்.
Advertisement
Advertisement
மேலும், 2029-ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப் போகிறது. பிரதமரை இனி தில்லியில் இருந்து முடிவு செய்யப் போவது இல்லை.
ராகுல் காந்திதான் தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் ராகுல் காந்தியே தலைவர் தளபதியை பிரதமராக அமர வைப்பார் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என பதிலடி கொடுத்தார்.
அவர் பேசுகையில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய் இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறியுள்ளார். தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்திதான் பிரதமர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எந்த சோர்வும் கிடையாது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதுநாள்வரை தனித்தனியாக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பிரதமர் வேட்பாளர் குறித்து பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், தலைமைச் செயலகம் வரை வார்த்தைப் போர் வெடித்திருக்கிறது.
Who will be the next Prime Minister? A war of words erupts outside the assembly!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.