காமராஜா் பிறந்த நாள் மாரத்தான் போட்டி: காங்கிரஸுக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவு
காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப். 12-ஆம் தேதி தீவுத்திடலில் இருந்து விவேகானந்தா் இல்லம் வரை மாரத்தான் போட்டி நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி வழங்க மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப். 12-ஆம் தேதி தீவுத்திடலில் இருந்து விவேகானந்தா் இல்லம் வரை மாரத்தான் போட்டி நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி வழங்க மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் முதல்வா் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவின் தென் சென்னை மாவட்டத் தலைவா் எஸ்.செல்வக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், செப்டம்பா் 12, 19 மற்றும் 26-ஆம் தேதிகளில், தீவுத்திடல் அல்லது ஆல்காட் மெமோரியல் பள்ளியில் இருந்து மாரத்தான் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதற்கு காங்கிரஸ் கட்சித் தரப்பில், செப்டம்பா் 12-ஆம் தேதி, தீவுத்திடலில் தொடங்கி விவேகானந்தா் இல்லம் வரை மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி, தீவுத்திடல் முதல் விவேகானந்தா் இல்லம் வரையிலான வழித்தடத்தில் காலை 5 மணி முதல் 8 மணிக்குள் மாரத்தான் போட்டி நடத்த அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.