FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை விமான நிலைய முதல் முனையத்தில் புதிய வசதி! செப்டம்பர் இறுதியில்

சென்னை விமான நிலைய முதல் முனையத்தில் வாடகைக் கார்களில் ஏறிச் செல்லும் கூடம் திறக்கப்படவிருப்பது பற்றி..

21 வினாடிகள் முன்பு
சென்னை விமான நிலையம் - ENS
பகிர்:

சென்னை விமான நிலையத்தின் முதல் முனையத்திலிருந்து வெளியேறும் பயணிகள், அதன் நுழைவு வாயிலில் இருந்தே வாடகை வாகனங்களில் ஏறிச் செல்லும் வசதி விரைவில் கொண்டுவரப்படவிருக்கிறது.

சென்னை விமான நிலையத்துக்குள், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது முதல் முனையத்திலிருந்து வெளியறும் பயணிகள், சொந்த வாகனமாக இருந்தால் அங்கேயே ஏறிக் கொள்ள முடியும். ஆனால், செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் கார் உள்ளிட்ட வாகனங்களை வெளியே வந்து அதற்குரிய இடத்தில் மட்டுமே ஏற முடியும். இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை அடைந்து வந்தனர்.

Advertisement

Advertisement

இதற்கான வாகனக் கூடம் ஒன்று உருவாக்கப்பட்டு இறுதிக் கட்டத்தில் உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும், முதல் முனையத்துக்கு அருகேயே, பயணிகள் வாடகை வாகனங்களில் ஏறிச் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் இந்த முனையத்திலிருந்து சுமார் 33 ஆயிரம் பேர் வெளியே வருகிறார்கள். இதில் குறைந்தது 10 ஆயிரம் பயணிகளாவது வாடகை வாகனங்களில்தான் வெளியேறுவார்கள். இவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனக் கூடமானது ரூ.28 கோடிச் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கூடம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், முதல் முனையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள் நேராக இங்கிருந்து வாகனங்களில் ஏறிச் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments