FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸுக்கு தவெக அமைச்சர்கள் நேரில் அழைப்பு விடுத்தது பற்றி...

5 செப்டம்பர் 2026, 12:27 pm IST
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்... - X
பகிர்:

செப். 9ல் தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் எம்.பி, பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரை தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அப்போது செப். 9ல் நடைபெறவுள்ள தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.

Advertisement

Advertisement

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியினரும் முதல்வர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினரும் கூறி வருவது பேசுபொருளாகியிக்கிறது.

இந்நிலையில் தவெக கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று, தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தவெக நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

ஏற்கெனவே, சென்னை கோவளத்தில் ஜூலை 1-ல் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றபோதிலும், இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

summary

Ministers extend personal invitation to Congress to attend tvk party meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments