மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் திமுக அல்ல: எம்.பி கனிமொழி
தவெகவைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது என திமுக மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்திருப்பது...
தவெகவைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது என திமுக துணை பொதுச்செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதற்கு திமுக துணை பொதுச்செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
சட்டப்பேரவையில் திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, திமுக முதன்மைச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேருவை பழிவாங்கப் பார்க்கிறது.
மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது என அவர் கூறியுள்ளார்.
The DMK is not a movement that yields to threats and raids...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.