மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (செப் 6) மாலை 7,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல்வர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதற்கட்டமாக 3,000 கன அடி நீரை திறந்து வைத்தார்
இதையடுத்து 1 ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில் 4 ஆயிரம் கன அடியாகயும், இரவு 8 மணிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறந்சுவிடப்பட்டது
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த ஐந்து நாள்களாக காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் 10,000 கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை(செப் 6) மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,075 கன அடியிலிருந்து 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது
அணையின் நீர் மட்டம் தற்போது 92.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சியாக உள்ளது.
Water release from Mettur Dam for irrigation increased to 10,000 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.