FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதி விபத்து: 2 பேர் பலி, மூவர் காயம்

சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதுப் பற்றி...

7 செப்டம்பர் 2026, 11:00 am IST
விபத்துக்குள்ளான கார்.
பகிர்:

சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் இருந்து காளையார் கோயிலுக்கு சிவகங்கையைச் சேர்ந்த 5 பேர் காரில் செல்லும் பொழுது ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் கொல்லங்குடி அருகே உள்ள தனியார் பள்ளி எதிரில் இருந்த மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.

இவ்விபத்தில் காரில் பயணித்த சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ச. கார்த்திகேயன்(39), சிவகங்கை நேரு பஜார் பகுதியைச் சேர்ந்த மு. ஷேக்முகமது(38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisement

Advertisement

காயமடைந்த சிவகங்கை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த த. வெங்கடசுப்பிரமணியன்(39), வீரமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஹ.தேவா(26), மதுரை முக்கம் பகுதியைச் சேர்ந்த சு. விக்னேஸ்வரன்(39) ஆகிய மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

summary

The tragic incident where 2 people died when a car crashed into a tree near Sivaganga has caused deep grief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments