FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடுதல்... வணிகவரித் துறை அறிவிப்புகள்!

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து...

7 செப்டம்பர் 2026, 1:09 pm IST
சார்பதிவாளர் அலுவலகம் - கோப்புப்படம்
பகிர்:

சட்டப்பேரவையில் இன்று(செப். 7) வணிக வரி பத்திரப் பதிவுத் துறை சார்பில் அந்தத் துறையின் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கிடவும் சார்பதிவகங்களின் பணிப்பளுவைப் பகிர்ந்தளிக்கவும், ஒரு வருவாய் கிராமத்தை முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைகள் மறுசீரமைத்தல்.

  • பணிப்பளுமிக்க 25 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்படும். அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அன்றே திரும்ப வழங்கப்படுவதை உறுதிசெய்தல்.

    Advertisement

    Advertisement

  • பொதுமக்களுக்கு ஏற்ற மேம்பட்ட பதிவுச் சேவையை வழங்கிட நவீன உள்கட்டமைப்புடன் கூடிய 25 மாதிரி பதிவு மையங்கள் (Model Registration Hubs) அமைத்தல்.

  • பதிவுத்துறை மென்பொருளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்திட தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமாக இந்திய தொழில்நுட்பக் கழகம், மெட்ராஸை (IIT-Madras) நியமித்தல்.

  • API தொழில்நுட்பம் மூலம் இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் நிகழ்நேரத்தில் சரிபார்த்து போலி ஆவணப் பதிவுகள் தடுத்தல்.

  • மாறிவரும் சட்ட நடைமுறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள சார்பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல்.

  • 15.09.2026 முதல் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெறும் போது உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் ரசீது ஆவணங்கள், நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை (Presenceless Registration) செய்வது கட்டாயமாக்குதல்.

  • 15.10.2026 முதல் நான்கு வகையான குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இணைய வழியில் ஆவணங்கள் அனுப்பி வைத்தல்.

  • API தொழில்நுட்பம் மூலம் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரிய நிலங்களின் பதிவுகளை உரிய துறை அலுவலர்கள் நேரடியாக உள்ளீடு செய்ய வழிவகுத்தல்.

  • 2018 முதல் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் மையக்கணினி சான்றிதழ் (Server Side Certificate) விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக அனுப்பி வைத்தல்.

  • தமிழகத்தில் பதிவாகும் ஆவணங்களின் தரவுகள் மற்றும் வழிகாட்டி மதிப்புகளைப் பகுப்பாய்வு செய்ய, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தரவு பகுப்பாய்வு மையம் (Data Analytics Cell) நிறுவுதல்.

  • வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாள்களில் மட்டும் செயல்படும். சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடுதல்.

summary

In the Legislative Assembly today (Sept. 7), Lokesh Tamilselvan, the Minister for Commercial Taxes and Registration, made several key announcements on behalf of the department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments