FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பது பற்றி...

7 செப்டம்பர் 2026, 9:42 am IST
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர்.. - கோப்புப்படம்.
பகிர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாக உயர்ந்த காரணத்தால் பருவ மழையை எதிர்நோக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

துவக்கத்தில் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதாலும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராத காரணத்தாலும் நீர் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,709 கனஅடி வீதம் நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 9,512 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதிலும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.39 அடியிலிருந்து 92.37 அடியாக குறைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் அணை மின் நிலையம் சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவணைகளில் மின் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதாக நீர் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

summary

The amount of water released from the Mettur Dam for Cauvery delta irrigation has been increased to 12,000 cubic feet per second (cusecs).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments