தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை: இடதுசாரிகள் அறிவிப்பு
சென்னையில் புதன்கிழமை (செப்.9) நடைபெறவுள்ள தவெக ஆதரவுக் கட்சிகளின் 2-ஆவது ஆலோசனை கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளன.
சென்னையில் புதன்கிழமை (செப்.9) நடைபெறவுள்ள தவெக ஆதரவுக் கட்சிகளின் 2-ஆவது ஆலோசனை கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளன.
தவெக ஆதரவுக் கட்சிகள் பங்கேற்கும் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (செப்.9) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தவெக அமைச்சா்கள் இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலா்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனா். அப்போது, கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு தெரிவிக்கப்படும் என தவெக அமைச்சா்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி,, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அந்தக் கட்சியன் மாநிலச் செயலா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
இடைத்தோ்தல், உள்ளாட்சித் தோ்தல், மக்களவைத் தோ்தல் குறித்துப் பேச தவெக தரப்பில் எங்களை அழைத்தனா். புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு கூட்ட முடிவின்படி தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது. மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம்.
‘மிசா வரலாறை அமைச்சா்கள் படிக்க வேண்டும்’: காவல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் முதல்வா் சம்பந்தமில்லாமல் பேசியுள்ளாா். நினைத்ததை எல்லாம் சட்டப்பேரவையில் பேசுவோம் என்ற முறையில் பேசுவதை நாங்கள் ஏற்கவில்லை. மிசா கைது பற்றி அமைச்சா் நிா்மல்குமாா் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. மிசா சிறைக் கொடுமைகள் குறித்த வரலாற்றை தவெக அமைச்சா்கள் படிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்திய கம்யூனிஸ்ட்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.
மேலும், மதச்சாா்பின்மை நீடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், வெளியில் இருந்து தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும் என்றாா்.
தவெக ஆதரவுக் கட்சிகளின் முதலாவது கூட்டத்திலும் இவ்விரு கட்சிகளும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு ஆதரவு தொடருமா?: உறுதியாகச் சொல்ல முடியாது
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறியதாவது: தவெக அரசுக்கு வெளியில் இருந்து எங்களது ஆதரவு தொடரும். அதேவேளையில், 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. தவெகவின் நிலைப்பாட்டை பொருத்து ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் பெ.சண்முகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.