FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெருந்துறை தேர்தல் வழக்கில் ஜெயக்குமாருக்கு சாதகம்! தோப்பு வெங்கடாசலத்தின் மனு நிராகரிப்பு!

பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்குப் பற்றி..

8 செப்டம்பர் 2026, 12:30 pm IST
சென்னை உயர் நீதிமன்றம் - DPS
பகிர்:

பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார்.

இதனிடையே, தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று, தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

பெருந்துறை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது என்பதும், தோப்பு வெங்கடாசலம் திமுகவில் விலகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The Madras High Court dismissed the election petition filed against the victory of Jayakumar, who was elected as the AIADMK MLA for the Perundurai constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments