மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது: செப்.9 நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கனஅடியாக குறைந்துள்ளது தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப்பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 91.92 அடியிலிருந்து 91.50 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 54.38 டிஎம்சியாக உள்ளது.
Water inflow to Mettur Dam decreases: Status as of Sept. 9!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.