செப்.15-இல் அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை
முன்னாள் முதல்வா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் 15-ஆம் தேதி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள் வரும் செப்.15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் மாநில நிா்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.