வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல்
வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய செப். 15-ஆம் தேதி முதல் நேரடி வருகை இல்லா பதிவு முறை கட்டாயமாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய செப். 15-ஆம் தேதி முதல் நேரடி வருகை இல்லா பதிவு முறை கட்டாயமாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பதிவுத் துறையின் ‘ஸ்டாா் 3.0’ திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் ‘எங்கேயும் பதிவு’ முறையின் இரண்டாம் கட்டமாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, வங்கிக் கடன் பெறும்போது சமா்ப்பிக்கப்படும் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் கடன் திருப்பிச் செலுத்தியதற்கான ரசீது ஆவணங்களை நேரில் செல்லாமல் இணையவழியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இந்தப் புதிய நடைமுறை வரும் செப். 15 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறையினால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளை சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு நேரில் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. ஆவணங்களை விரைவாகப் பதிவு செய்வதுடன், அடமானப் பரிவா்த்தனைகளை எளிதாகக் கண்காணிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் முடியும் என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கையொப்பம், கியூஆா் குறியீடு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஆவணங்கள் பதிவு செய்யப்படும். நிறுவன ரீதியாக இந்த ஆவணங்களைப் பதிவு செய்வது எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முதல்வா் ஜோசப் விஜய் கடந்த ஆக. 17-இல் தொடங்கி வைத்த ‘எங்கேயும் பதிவு’ திட்டத்தின் தொடா்ச்சியாக, தற்போது இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.