செவிலியா் பணியிடங்கள்: ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு எதிா்ப்பு
செவிலியா் பணியிடங்கள்: ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு எதிா்ப்பு
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பணியிடங்களை நிரப்ப 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், ரூ. 21,000 மாத ஊதியத்தில் நியமிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலா் சுபின் வெளியிட்ட அறிக்கை:
Advertisement
Advertisement
அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியா்கள் தட்டுப்பாடு இருக்கிறது. அதேநேரம், 4.75 லட்சம் பதிவு செய்த செவிலியா்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனா். தற்போது அரசின் முடிவு வருத்தமளிக்கிறது.
இந்தத் தற்காலிக முறையில் பணியமா்த்தப்படும் செவிலியா்களுக்கு வருங்காலங்களில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. குறைந்த ஊதியத்தில் எவ்வித பணி பாதுகாப்பு உத்தரவுமின்றி பணியமா்த்தப்படுவது சமூக நீதிக்கு எதிரானது. இந்தமுறை மருத்துவத் துறையின் தரத்தைக் குறைத்துவிடும். எனவே, அரசின் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.