FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்

மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது என திருமாவளவன் கருத்து...

14 செப்டம்பர் 2026, 11:12 am IST
தொல். திருமாவளவன் - கோப்புப்படம்
பகிர்:

பட்டினப்பாக்கம் மக்கள் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாடு அரசால் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையத் திட்டமும் அப்படிதான். அதேபோன்று, பட்டினப்பாக்கத்தில் 27 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் இசைவு கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விமர்சனங்கள் தொடர்பாக பேசிய அவர், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முழுமையாக முடிவடையவில்லை. தனது பயணத்தை முழுமையாக முடித்துவிட்டு முதல்வர் வரும்போதுதான் கருத்து கூற முடியும் என்றார்.

இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்காற்றும். பலமுனைப் போட்டிக்கு ஜனநாயகம் இடம்கொடுக்கிறது, அதனை ஆரோக்கியமாக அணுக வேண்டும். தொடக்கத்திலிருந்தே இடதுசாரிக் கட்சிகள் ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு, நாங்கள் இணைந்தே பணியாற்றுவோம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆட்சிக்கு ஆதரவு என்பதில் ஐயமில்லை, ஆனால், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்கள். அது அவர்களுக்கான சுதந்திரம், உரிமை. மசவெ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

The Secretariat cannot be built in Pattinapakkam without the people's consent! — Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments