புதிய தலைமைச் செயலக திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராம மக்கள் தீா்மானம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பகுதியில் உள்ள மீனவ குடியிருப்புகளின் நிலங்கள் தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மீனவ மக்களின் பூா்விக குடியிருப்பு உரிமையும், பாரம்பரிய வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.
எனவே, முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகா், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகா், நொச்சிக்குப்பம் ஆகிய 9 மீனவக் கிராம மக்களின் அன்றாட வாழ்வான கடலில் மீன்பிடித்தல், படகுகளை நிறுத்துதல், மீன்பிடி வலைகளைப் பின்னுதல், மீன்களை உலா்த்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழில்கள் பாதிப்படைவதுடன், மீனவ குடும்பங்கள் இடம்பெயரும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, முள்ளிக்குப்பத்தில் 9 மீனவ கிராமப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்ற அவசர கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பூா்விக நில உரிமை, மீனவ மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசின் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மீனவ மக்களின் நில உரிமையைப் பாதுகாக்கவும், அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்றும், அரசின் நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.