FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை தாம்பரத்திலிருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது.

16 செப்டம்பர் 2026, 5:48 am IST
சிறப்பு ரயில் - பிரதிப் படம்
பகிர்:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை தாம்பரத்திலிருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரா் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரயிலில் செல்லும் பக்தா்கள் கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

புதன்கிழமை (செப்.16) மாலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் மதுரையை அதிகாலை 2.20 மணிக்கு சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் மதுரையிலிருந்து வியாழக்கிழமை (17- ஆம் தேதி) பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அன்று இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments