மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசு
மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவர் பாரதிதாசனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதில்...
மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தனக்கான அரசின் கல்வி உதவித் தொகை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கேட்டும் கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் வெளியிட்ட விடியோவுக்கு பலரும் ஆதரவுக் குரல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, மாணவருக்கு உரிய நிதி வழங்கப்பட்டது என்று கூறியிருந்தார். இதையடுத்து மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
'கல்வி உதவித்தொகை கேட்டு அதற்கான ரசீது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறேன். ஆனால், சமூகநீதித் துறையிலிருந்து என் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர், என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது வருத்தமளிக்கிறது' என்று கூறியிருந்தார்.
இரண்டாம் ஆண்டுக்கான கல்வி நிதி கொடுக்கப்படாததால் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேற்றும் அபாயம் இருப்பதாகவும் மாணவர் பாரதிதாசன் கூறியிருந்தார்.
இதையடுத்து அமைச்சர் வன்னி அரசு திண்டிவனத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் மாணவர் பாரதிதாசனின் முழுமையான படிப்புக்கு அரசு உதவி செய்யும். அவரது படிப்பு தொடர வேண்டும். இந்த ஆராய்ச்சி படிப்பு தமிழ்நாட்டில் இந்த மாணவர் மட்டும்தான் படிக்கிறார். அவர் முழுமையாக படித்துவிட்டு திரும்ப வேண்டும், அவருக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தாண்டுக்கான உதவித்தொகை அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவரின் வலி எனக்கு தெரியும். அவரின் கல்விக்கு அரசு அனைத்து வகையிலும் உதவும்.
பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் அரசு உதவும். தவெக அரசு அமைந்தவுடன் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
Funds for student Bharathidasan to be released: Minister Vanni Arasu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.