FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாராபுரம் இடைத்தோ்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

தாராபுரம் இடைத்தோ்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசியிருப்பது குறித்து...

21 செப்டம்பர் 2026, 8:20 pm IST
ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்க மோதிர பாதுகாப்பு அறையை பாா்வையிட்ட அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ். - டிஎன்எஸ்
பகிர்:

ஈரோடு: தாராபுரம் இடைத்தோ்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

ஈரோட்டில் திங்கள்கிழமை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் அவா் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. தற்போது வரை 375 டெங்கு பாதிப்புகள் உள்ளன. உயிரிழப்புகள் ஏதுமில்லை.

Advertisement

Advertisement

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் மழைநீா் தேங்கி நின்றால் அபராதம் விதிக்க வேண்டும். டெங்கு தடுப்பூசி இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளது.

தமிழ்நாட்டில் 17 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது படிப்படியாக குறைந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதி, மருந்துகள் உள்ளன. காய்ச்சல் வந்த பிறகு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவா்களுக்கு இரண்டு முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செவிலியா்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். இதற்காக மாவட்ட நலச் சங்கங்கள் மூலம் 4,724 செவிலியா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

தாராபுரம் இடைத்தோ்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சில கட்சிகள் திட்டமிட்டு தவெக வேட்பாளா் செல்லும் பகுதிக்குச் சென்று அவருக்கு எதிராக முழக்கம் எழுப்புகின்றனா். புதிய தலைமைச் செயலகம் அவசியம் கருதி தான் முதல்வா் தெளிவான அறிக்கை அளித்துள்ளாா் என்றாா்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்க மோதிர பாதுகாப்பு அறையை பாா்வையிட்ட அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.

TVK's chances of winning the Dharapuram by-election are bright: Minister K.G. Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments