பணப்பட்டுவாடா, பிரசாரத்தில் மாணவர்களும் அரசு வாகனங்களும்..! தவெக மீது திமுக புகார்!
தேர்தல் நடத்தை விதிகளை தவெக மீறியதாக திமுக புகார் அளித்தது குறித்து...
தேர்தல் நடத்தை விதிகளை தவெக மீறியதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அக்டோபரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது ஆளுங்கட்சியான தவெக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாவது, "தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தவெகவினர், குறிப்பாக முதல்வரால் தேர்தல் விதிமுறைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக விதிமுறைகள் மீறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் 3 புகார்களை அளித்துள்ளோம். வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது, தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது, அரசு வாகனங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை மூலம் தேர்தல் நடத்தை விதிகளை தவெக மீறுவதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்களைத் தவிர்க்க உடனடி மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
DMK complains that TVK violated the Model Code of Conduct
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.