FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏரியில் ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

ஏரியில் மண் திருட்டில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து...

27 செப்டம்பர் 2026, 2:37 pm IST
எ.வ.வேலு | லஞ்ச ஒழிப்புத் துறை - கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலையில் ஏரியில் மண் திருட்டில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

2025 டிசம்பரில் திருவண்ணாமலை மாவட்டம், மலப்பம்பாடி கிராமத்தில் திமுக வடமண்டல இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற திடலும் எ.வ. வேலுவின் மகன் எ.வ. குமரனின் ருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இந்த நிலையில், திமுக மாநாடு நடைபெற்ற கலைஞர் திடலின் நிலத்தைச் சமன்படுத்துவதற்காக மலப்பம்பாடி ஏரியிலிருந்து சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்துக்கு திமுகவினர் சட்டவிரோதமாக மண்ணைத் தோண்டி எடுத்ததாகப் புகார் எழுந்தது.

Advertisement

Advertisement

சட்டத்தின்படி, பொதுப் பயன்பாட்டுக்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்குமேல் அனுமதி இல்லை. ஆனால், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப்பட்டு, கலைஞர் திடல் சமன்படுத்தப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து 45,72,058 கன அடி மண் அள்ளப்பட்டு, வருவாய்த் துறை, மாநகராட்சி அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறையிடம் எந்தவொரு அனுமதியையும் பெறாமல், எ.வ. குமரனுக்கு சொந்தமான அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ. 8 கோடிக்குமேல் இழப்பும், விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, எ.வ. வேலு மற்றும் அவரது மகன் எ.வ. குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்த நிலையில், இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் எ.வ. வேலு மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

The DVAC has registered a case against former DMK Minister E.V. Velu for alleged sand theft from a lake

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments