11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
சேலம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதன்கிழமை (செப்.30) பலத்த மழைக்கு வாய்ப்பு
சேலம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதன்கிழமை (செப்.30) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வட தமிழகம் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தெற்கு தெலங்கானாவில் இருந்து மன்னாா் வளைகுடா வரை, ராயலசீமா, வடக்கு தமிழகம், அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திரம் பகுதிகளின் மேல் காணப்படும் வளிமண்டல சுழற்சி வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, புதன்கிழமை (செப்.30), நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், விழுப்புரம், கடலூா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை (செப்.30) மாலை, இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 102.2, ஈரோடு -10112, தஞ்சாவூா்- 100.4, திருச்சி - 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 90 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.