இளம் வயதில் உயிரிழக்கும் தமிழக ஆண்கள்! அதிர்ச்சியூட்டும் தரவுகள்!
தமிழ்நாட்டில் பெண்களவிட ஆண்களே அதிகளவில் உயிரிழப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன...
தமிழ்நாட்டில் கடந்தாண்டு பெண்களைவிட ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
பொது சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ ஆய்வறிக்கையில், 2018 முதல் 2022 வரையிலான குடிமைப் பதிவு முறை தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த 2025-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 4,01,860 ஆண்களும் 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். பெண்களைவிட 1,10,513 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே பெண்களைவிட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த வித்தியாசமானது, 2023-இல் 1.10 லட்சம், 2024-இல் 1.07 லட்சம் ஆகும்.
வயது வாரியாக
• 15–24: 9,167 ஆண்கள் மற்றும் 4,461 பெண்கள்
• 25–34: 17,135 ஆண்கள் மற்றும் 6,177 பெண்கள்
• 35–44: 31,585 ஆண்கள் மற்றும் 11,406 பெண்கள்
• 45–54: 54,743 ஆண்கள் மற்றும் 26,269 பெண்கள்
• 55–64: 81,840 ஆண்கள் மற்றும் 51,365 பெண்கள்
கல்லூரி படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் உள்ளிட்டவை எதிர்கொள்ளும் வாழ்க்கையின் முக்கிய காலகட்டமான 15 வயது முதல் 34 வயது வரையில் மட்டும், கடந்தாண்டில் 26,302 ஆண்களும், 10,638 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை வளர்க்கும் காலகட்டமான 35 முதல் 54 வயது வரையில் 86,328 ஆண்களும், 37,675 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
அதிகளவிலான ஆண்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணங்களாக சாலை விபத்துகள், தற்கொலை, புகையிலை/மது பயன்பாடு மற்றும் சரியான காலகட்டத்தில் கண்டறியப்படாத இதயம், சிறுநீரகம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் ஆகியவை கவலைக்குரிய காரணிகளாக இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், மிகப்பெரிய தரவு இடைவெளியும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 41% மட்டுமே மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கப்பட்டன. அதாவது 2,93,207 பேர் உயிரிழந்த நிலையில், 2,80,856 பேரின் உறவினர்கள் மட்டுமே இறப்புக்கான காரணத்துடன் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
ஸ்வீடன் நாட்டு தரவுகளுடன் தமிழ்நாட்டின் தரவுகளை ஒப்பிடுகையில், அங்கு ஆண்கள், பெண்கள் இறப்பு விகிதம் சமமாகவே (தலா 46,000) இருக்கிறது. தமிழ்நாட்டில் 65 வயதுக்கு முன்னதாக 42% பேர் உயிரிழக்கும் நிலையில், ஸ்வீடனில் அந்த விகிதம் 10% மட்டுமே.
இது வெறும் சுகாதாரப் புள்ளிவிவரம் மட்டுமல்ல. வேலைக்குச் செல்லும் வயதுடைய ஆண்களின் அகால மரணங்கள் என்பது, குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை பாதிக்கும் என்பது கவலைக்குரியதாக உள்ளது.
Tamil Nadu men dying at a young age! Shocking data!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.