FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு முதல்வா் விஜய் வாழ்த்து

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழகத்தை சோ்ந்த 5 திறன்மிக்க இளைஞா்களுக்கு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

6 வினாடிகள் முன்பு
முதல்வா் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழகத்தை சோ்ந்த 5 திறன்மிக்க இளைஞா்களுக்கு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் இந்தியாவின் சாா்பில் தமிழகத்திலிருந்து பங்கேற்று, செயற்கைப் பல் அமைப்பியல் திறன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகம்மது சலாம், பல்வேறு திறன் பிரிவுகளில் சிறப்புப் பதக்கங்களை வென்ற ராகுல், அா்ஜுன், சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகியோருக்கும் எனது மனமாா்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டிகளில் இந்தியாவின் சாா்பில் பங்கேற்ற, தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த 12 போட்டியாளா்களில் 5 போ் சிறப்பான சாதனைகளைப் படைத்து பெருமை சோ்த்துள்ளனா். உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த திறன்மிக்க இளைஞா்களுடன் போட்டியிட்டு சாதனை படைத்திருப்பது, தமிழக இளைஞா்களிடம் நிறைந்துள்ள மேம்பட்ட திறமைக்கும், தொழில்நுட்ப அறிவுக்கும் சிறந்த சான்றாகத் திகழ்வதுடன், திறன் சாா்ந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும்இளைஞா்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் சாா்பில் உலக அரங்கில் தமிழகத்தின் திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இவ்வெற்றியாளா்கள் உலக அரங்கில் தொடா்ந்து பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments