FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக - பாஜக - தவெக: மேடையில் குழம்பிய முதல்வர் விஜய்!

பிரசார மேடையில் கட்சி பெயர் கூறும்போது முதல்வர் விஜய் குழம்பியது குறித்து...

பகிர்:

தாராபுரம் பிரசார பொதுக்கூட்ட மேடையில், முதல்வர் விஜய், கட்சி பெயர் குறித்து பேசும்போது மாற்றித் தெரிவித்தார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வா் ச. ஜோசப் விஜய் பிரசாரம் இன்று(செப். 30) மேற்கொண்டார்.

இந்தக் கூட்டட்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

முதல்வர் விஜய் பேசும்பேது, ”நம்மீது ஒருமையில் பேசுகிறார்கள். அவன், இவன் அப்படியெல்லாம். நாம் அவரை உறவோடு அழைத்தால் தவறாம். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கை, இடைத்தேர்தலுக்குப் பிறகு வரும்.

மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம் என்று சொல்வாராம், ஆனால் அதனை அவரே மதிக்கமாட்டாராம். என்ன சதி வேலையெல்லாம் செய்யலாம், யாரிடம் எல்லாம் கூட்டு சேரக்கூடாதோ, அவரிடம் சேருவார்.

தவெக ஒரு கிளை ஆரம்பித்து இருக்கிறார்கள். முதலில் பாஜகவின் கிளையாக இருந்தது, தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது” என்றார்.

முதல்வர் விஜய் கட்சியின் பெயர் கூறும்போது, மாற்றிக்கூறி பேசியது பேசுபொருளாகி இருக்கிறது.

summary

While speaking at a public campaign meeting in Dharapuram, Chief Minister Vijay misspoke when mentioning the party's name.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments