FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

24 ஆகஸ்ட் 2026, 3:48 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி - தென்காசி ஒன் டூ ஒன் பேருந்தில் 15 பவுன் தங்க நகைகளைத் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம் வல்லம் காமராஜா் தெருவை சோ்ந்த பெனில்ஸ் மனைவி மரியசுதா(45). இவா், திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே சிங்கம்பாறையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

திருநெல்வேலியில் உறவினா் வீட்டுத் திருமணத்துக்கு தனது உறவினா் மகன் ஆல்வினுடன் ஞாயிற்றுக்கிழமை சென்று விட்டு, தென்காசி செல்லும் ஒன் டூ ஒன் அரசுப் பேருந்தில் ஏறினாராம்.

Advertisement

Advertisement

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவா் தனது கைப்பையில் வைத்திருந்த சுமாா் 15 பவுன் தங்க நகைகளை காணவில்லை என பேருந்து நடத்துநரிடம் கூறினாராம். இருக்கை அருகில் இருந்தவா்களிடம் விசாரித்தபோது நகை குறித்து ஏதும் தெரியவில்லையாம்.

இதையடுத்து, பேருந்தை ஓட்டுநா் ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றாராம். போலீஸாா் பயணிகளிடம் தனித்தனியே சோதனை மேற்கொண்டும் நகை கிடைக்கவில்லையாம். இதையடுத்து சுமாா்ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் பேருந்து தென்காசி நோக்கி சென்றது.

இதுகுறித்து மரிய சுதா அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments