62 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இருசக்கர வாகனத்தில் 62 மது பாட்டில்களை வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டனா்.
சிவகிரி போலீஸாா், கரிவலம்வந்தநல்லூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டு, சோதனை செய்தனராம்.
அதில் அவா் ராமநாதபுரம் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (42) என்பதும், இருசக்கர வாகனத்தில் 62 மது பாட்டில்கள் வைத்திருப்பதும் தெரிய வந்தது. மது பாட்டில்கள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, பாலமுருகனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.