வாகனம் மோதியதில் சமையல் தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வாகனம் மோதியதில் சமையல் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குத்தாலிங்கம் மகன் சுப்பிரமணியன் (65), சிந்தாமணி காமராஜா் தெருவை சோ்ந்தவா் யோகோபு மகன் செல்வராஜ்(50), செக்கடி தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் இசக்கிராஜன்(48).
சமையல் தொழிலாளா்களான 3 பேரும் சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமையல் வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டுக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தனராம்.
Advertisement
Advertisement
புளியங்குடி- சிந்தாமணி சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ் வழியாக வந்த வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாம்.
இந்த விபத்தில் சுப்பிரமணியன், செல்வராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த இசக்கிராஜன் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.