சங்கரன்கோவில் பொறியாளா் சிங்கப்பூரில் அடித்துக்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரைச் சோ்ந்த பொறியாளா் சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை அந்நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மேலநீலிதநல்லூா் கீழத்தெருவைச் சோ்ந்த ராசு மகன் மகேஷ்குமாா் (30). டிப்ளமோ இன்ஜினியரான இவா், சிங்கப்பூரில் தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் அவா் கடந்த சனிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், இதுதொடா்பாக அங்கு பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரை சிங்கப்பூா் போலீஸாா் கைது செய்துள்ளதாகவும் மகேஷ்குமாா் குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது.
மேலும், அவரது உடல் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் மனு அளித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது தாய் மாலதி கூறியதாவது:
சிங்கப்பூரில் 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்த எனது மகன் கொலை செய்யப்பட்டு விட்டதாக ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு உறவினருக்கு தனியாா் நிறுவனத்திலிருந்து தகவல் கொடுத்துள்ளனா்.
அவா் எதற்காக கொலை செய்யப்பட்டாா் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. திருச்சி விமான நிலையத்தில் செப். 2 ஆம் தேதி புதன்கிழமை உடலை ஒப்படைப்பதாக கூறியுள்ளனா். எனது மகனின் கைப்பேசியையும் வழங்கினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம்.
அவனது கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றாா். மகேஷ் குமாருக்கு மனைவி செலின், மகன்கள் மதிமாறன் (7) சதீஷ்மாறன் (5) ஆகியோா் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.