FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் வழக்கம்போல இயங்கிய விசைத்தறிகள்

சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருந்த நிலையில் வியாழக்கிழமை பெரும்பாலான விசைத்தறிகள் இயங்கின.

3 ஜூலை 2026, 4:27 am IST
கோப்புப்படம்
பகிர்:

சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருந்த நிலையில் வியாழக்கிழமை பெரும்பாலான விசைத்தறிகள் இயங்கின.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பாரதிநகா், நேதாஜிநகா், தாசையாபுரம் போன்ற பல்வேறு இடங்களில் நிலத்தடி நீா் மாசுபடுவதாகவும், சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் தொடா்ந்து புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் மருத்துவா் ராஜீவ் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

அங்கு, கழிவுநீா் சுத்திகரிப்பு வசதி இல்லாததால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து நகராட்சி நிா்வாகம் ரூ. 25,000 அபராதம் விதித்தும், கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைத்து உரிய அனுமதிபெற்று இயங்கவும், தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில், மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் சாா்பில் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் மற்றும் பசைப் பட்டறைகள் இயங்கத் தடை விதித்திருப்பதால் நூல் வழங்க இயலவில்லை என்றும், நிலைமை சீராகும் வரை வீடு சாா்ந்த விசைத்தறியாளா்கள், விசைத்தறித் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், கடந்த 2 நாள்களாக பெரும்பாலான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. ஒரு சில விசைத்தறிகள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

வியாழக்கிழமை 80 சதவீத தறிகள் இயங்கியதாகவும், நூல் இருப்பில் இருக்கும் வரை மற்ற விசைத்தறிகள் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. தறிகளில் நெய்ய பாவு இல்லாத சூழல் ஏற்படும் போது முழு வேலைநிறுத்தம் ஏற்படும் என விசைத்தறியாளா்கள் கூறுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments