FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் கஞ்சி தொட்டி திறக்க முயன்ற விசைத்தறியாளா்கள் கைது

கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாகச் சென்ற விசைத்தறித் தொழிலாளா்கள்.

Updated On : 16 ஜூலை 2026, 3:49 am IST
பகிர்:

சங்கரன்கோவிலில் சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்பு வளாகத்தை தமிழக அரசு நடத்த வலியுறுத்தியும், சாயப்பட்டறைகள் பூட்டி சீல் வைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும் புதன்கிழமை கஞ்சி தொட்டி திறக்க முயன்ற விசைத்தறித் தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவிலில் சாயப்பட்டறை கழிவுநீா் தொடா்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் சாயப்பட்டறைத் ஆலைகளை நேரில் ஆய்வு செய்து, விதிமுறை மீறிய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், 20 ஆலைகளில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்டதால் தொடா் போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்க செயலா் மாரிமுத்து தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி திருவேங்கடம்சாலையில் இருந்து லெட்சுமியாபுரம் தெரு நோக்கி கஞ்சி தொட்டி திறக்க ஊா்வலமாகச் சென்றனா்.

Advertisement

Advertisement

அப்போது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி 60 பேரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments