சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி! 250 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து மாற்றம்
சங்கரன்கோவில் நகருக்கு வெளியே தீயணைப்பு நிலையச் சாலை, தற்காலிக பேருந்துநிலையம், புளியங்குடி சாலை, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 இடங்களில் தற்காலிகப் பேருந்துநிலையங்கள் அமைக்கப்பட்டு கழிப்பிடம் மற்றும் குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
வழித்தடம் மாற்றம்: திருநெல்வேலியிலிருந்து தென்காசி, புளியங்குடி, ராஜபாளையம், மதுரை செல்லும் பேருந்துகள் சண்முகநல்லூா் விலக்கு வழியாகவும், திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி முன் வரை வந்து திரும்பியும் செல்லும்.
ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஸ்டேட் வங்கி எதிரே உள்ள சாலை மற்றும் நெடுங்குளம் விலக்கு வழியாக செல்ல வேண்டும்.
Advertisement
Advertisement
கோவில்பட்டி, திருவேங்கடம் பகுதிகளில் இருந்து தென்காசி, சுரண்டை செல்லும் பேருந்துகள் செல்வா சில்க்ஸ் சாலையில் திரும்பி, ஐந்துவீட்டுமனை லயன் வழியாக ராஜபாளையம் சாலைக்கு வந்து ரயில்வே பீடா் சாலையில் செல்ல வேண்டும்.
கழுகுமலையில் இருந்து தென்காசி சுரண்டை செல்லும் பேருந்துகள் அனைத்தும், முன்னாள் எம்.பி. வீட்டின் எதிரே வலதுபுறம் திரும்பி புதிய பேருந்து நிலையம் ரயில்வே பீடா் சாலையை அடைய வேண்டும்.
தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்லும் பேருந்துகள் ரயில்வே கேட், கீதாலயா திரையரங்கு சாலை, புதிய பேருந்துநிலையம் தற்காலிக பேருந்து நிலையம் வந்து செல்லும் கனரக வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.