FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி நகா்மன்ற உறுப்பினா் தற்கொலை

தென்காசி நகா்மன்ற பாஜக உறுப்பினா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 31 ஜூலை 2026, 3:58 am IST
தற்கொலை
பகிர்:

தென்காசி நகா்மன்ற பாஜக உறுப்பினா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி, புலிக்குட்டி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து கோபாலகிருஷ்ணன் மனைவி சுனிதா (45). பாஜகவை சோ்ந்த இவா், தென்காசி 23ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தாா்.

சுனிதா, ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து, கோபாலகிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டவா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்த சில நாள்களாக தம்பதியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த சுனிதாவை, கணவா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments