FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே கழிவுகளை கொட்டிய சம்பவம்: மேலும் ஒருவா் கைது

17 நவம்பர் 2026, 3:57 am
கேரள மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள். - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கேரள கழிவுகளைக் கொட்டிய சம்பவம் தொடா்பாக அந்த மாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் முத்தரசு என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.இதுகுறித்த புகாரின் பேரில் சின்னக்கோவிலானங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனா்.

மேலும், இச்சம்பவத்துக்கு முக்கிய உடந்தையாக இருந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அமிா்தராஜ் மகன் பாபுராஜ் (45) என்பவரை மற்றொரு தனிப்படை அங்கு சென்று கைது செய்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக தென்காசி காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் கூறுகையில், திருவனந்தபுரத்தில் பழைய இரும்பு பிளாஸ்டிக் கழிவுகள் வியாபாரம் செய்து வரும் பாபுராஜ், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து கழிவுகளை மட்டும் லாரிகளில் ஏற்றி தமிழகத்திற்கு அனுப்பும் பணியையும் துணைத் தொழிலாக செய்து வந்துள்ளாா்.

ஒரு லோடுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வாடகை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கழிவுகளை தமிழகப் பகுதியில் கொட்டி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது, புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளா் பாண்டியம்மாள் ஆகியோா் உடனிருந்தனா் .