கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூா் கல்லகநாடியம்மன் கோயில் வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சசிவீரணன்(49). விவசாயியான இவா், சனிக்கிழமை மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்குச் சென்றாா்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரைக் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அவரது நிலத்திலுள்ள மின்கம்பம் அருகே அவா் மின்சாரம் பாய்ந்து இறந்துகிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.