விவசாயியிடம் லஞ்சம்: மின்கம்பியாளா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விவசாயியிடம் லஞ்சம் பெற்றதாக மின்கம்பியாளரை (லைன் மேன்) லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விவசாயியிடம் லஞ்சம் பெற்றதாக மின்கம்பியாளரை (லைன் மேன்) லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (42). இவா் தனது தந்தை சுந்தரபாண்டியன் பெயரிலுள்ள 6 ஏக்கா் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறாா். அந்த நிலத்துக்கு இலவச மின் இணைப்பு பெற்றுள்ள நிலையில், மின்தேக்கி (கண்டன்சா்) பொருத்தி மோட்டாரை இயக்கி வந்தாராம்.
இதையறிந்த கடையநல்லூா் மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலக மின்கம்பியாளா் விஜய் (39), புகைப்படம் எடுத்து மின்வாரிய பறக்கும் படை அதிகாரிகளுக்கு அனுப்பினால் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிப்பாா்கள் என முருகேசனை மிரட்டினாராம். மேலும், அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலிருக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டாராம். தன்னிடம் அவ்வளவு தொகை இல்லையென முருகேசன் கூறினாராம். எனினும், குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் வேண்டும் என விஜய் கேட்டாராம்.
Advertisement
Advertisement
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் கடந்த புதன்கிழமை (செப். 2) புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அவா்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை விஜய்யிடம் முருகேசன் வியாழக்கிழமை கொடுத்தாா். அப்போது, விஜய்யை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.