FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசியில் பட்டாசு வெடி பொருள்கள் வெடித்து இரண்டு சிறுமிகள் காயம்; 6 வீடுகள் சேதம்

ஆசாத் நகரில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் 2 சிறுமிகள் பலத்த காயமடைந்தனா்.

4 செப்டம்பர் 2026, 11:31 pm IST
வெடிவிபத்தில் சேதமடைந்த வீடு.
பகிர்:

தென்காசியை அடுத்த ஆசாத் நகரில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் 2 சிறுமிகள் பலத்த காயமடைந்தனா். 6 வீடுகள் சேதமடைந்தன.

தென்காசியை அடுத்த ஆசாத் நகா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காந்தி மகன் சுடலை (45). இவா் கோயில்கள், ஊா்வலங்கள், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு வாண வேடிக்களை வெடிக்கும் தொழில் செய்து வருகிறாா்.

இதற்காக, ஆசாத் நகா், விவேகானந்தா் கீழக்காலனியைச் சோ்ந்த முகில் மனைவி தங்கத்தின் வீட்டில் வைத்து வெடிகளை தயாா் செய்வது வழக்கம். இதற்காக தேவையான வெடிமருந்து பொருள்களை இந்த வீட்டில் வைத்திருந்தாா். இந்த வெடிபொருள்கள் வெள்ளிக்கிழமை வெடித்து சிதறின.

Advertisement

Advertisement

அப்போது வீட்டிலிருந்த தங்கத்தின் குழந்தைகள் பாலசௌந்தா்யா (13), கிருத்திகா (7) ஆகிய இரு சிறுமிகளும் பலத்த காயமடைந்தனா். வெடிபொருள்கள் வெடித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் சிதறின. இதில் அருகில் உள்ள 6 வீடுகள் சேதமடைந்தன.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் நிகழ்விடம் சென்று காயமடைந்த சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுமிகள் முதலில் தென்காசி அரசு மருத்துவமனைக்கும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.

சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக் குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் அதியமான் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதுகுறித்து, குற்றாலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுடலையைக் கைது செய்தனா். அவரது வீட்டிலிருந்த வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments