FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மாவட்ட அளவிலான கராத்தே, சிலம்பப் போட்டிகள்: 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

பாவூா்சத்திரத்தில் மாா்சியல் ஆா்ட்ஸ் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.

6 செப்டம்பர் 2026, 12:14 am IST
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய மாா்சியல் ஆா்ட்ஸ் முன்னேற்ற சங்கத் தலைவா் ஜே. சுரேஷ்குமாா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் மாா்சியல் ஆா்ட்ஸ் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இப்போட்டிகளில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 500 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். வயது மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

குறிப்பாக, தொடுமுறை சண்டை பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு பரிசாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாா்சியல் ஆா்ட்ஸ் முன்னேற்ற சங்கத் தலைவா் ஜே. சுரேஷ்குமாா், பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா். போட்டிகளை, கராத்தே, சிலம்பம் ஆசிரியா்கள் எஸ். முருகன், எம். பொன்னரசி, எம். பாலா, பாலசுப்ரமணியன், பி. ஷாலினி, எஸ். ராஜகுமாா், ஐயப்பன், மணி, காா்த்திகேயன் ஆகியோா் முன்னின்று நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments